Politics
செஞ்சி, திண்டிவனத்தில் இன்று தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
செஞ்சி: செஞ்சி, திண்டிவனத்தில் இன்று தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.
தி.மு.க., விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் அறிக்கை:
விழுப்புரம் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த செஞ்சி, மயிலம் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று 10ம் தேதி காலை 10:00 மணிக்கு செஞ்சி அடுத்த ஊரணித்தாங்கல் சஞ்சனா பேலசிலும், திண்டிவனம் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு மாலை 4:00 மணிக்கு திண்டிவனம் சங்கமித்ரா திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளது.
மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமை தாங்குகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் முன்னிலை வகிக்கிறார்.
தலைமை பிரதிநிதிகள் புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா, மாநில மாணவரணி செயலாளர் வீரமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.