Politics
காங்., நிர்வாகிகள் கூட்டம்
திண்டிவனம்: திண்டிவனத்தில் ஒலக்கூர் வட்டாரத்திற்கான காங்., புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்து.
விழுப்புரம் மாவட்ட காங்., கட்சியில், இயக்க மறுசீரபை்பு அடிப்படையில் புதிதாக நகர தலைவர், வட்டார தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக கடந்த 1ம் தேதி செஞ்சியில் மாவட்ட காங்., தலைவர், மாவட்ட பார்வையாளர், மண்டல பொறுப்பாளர் முன்னிலையில் மனுக்கள் பெறப்பட்டது.
இதன் அடிப்படையில் நேற்று காலை திண்டிவனத்தில் முதல் கட்டமாக ஒலக்கூர் வட்டாரத்திற்கான தலைவர், மண்டல தலைவர், மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யவதற்கான கூட்டம் நடந்தது.
இதில் காங்., மாநில துணைத் தலைவர் முருகானந்தம், வடக்கு மாவட்ட தலைவர் ரங்கபூபதி, மாவட்ட பார்வையாளர் மோகன் குமாரராஜா பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஏற்கனவே புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக மனு கொடுத்தவர்களை தவிர்த்து, புதிதாக நிர்வாகிகள் பலர் மனுக்களைக் கொடுத்தனர். மேலிட பார்வையாளர்கள் ஆலோசனைக்குப்பின், ஒலக்கூர் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.
