அழுகிய நிலையில் ஆண் உடல் :விருத்தாசலத்தில் திடீர் பரபரப்பு
விருத்தாசலம்:விருத்தாசலத்தில் அழுகி, காய்ந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் இருந்து எருமனுார் செல்லும் இணைப்பு சாலையில், வானவில் டவுன்ஷிப் பின்புறம் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. தகவலறிந்த விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் சென்று விசாரித்தனர்.
அதில், இறந்து பல வாரங்களான நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் அழுகி, எலும்புடன் காய்ந்த நிலையில் சடலம் இருந்தது. தாடி, மீசை எலும்பு பகுதியுடன் ஒட்டியிருந்ததால், ஆண் என்பது உறதி செய்யப்பட்டது.