அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
திருப்போரூர்:வேங்கடமங்கலத்தில் ராஜரத்தினம், 45, என்பவர் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜரத்தினம், 45; சமையலர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக வேங்கடமங்கலம் அண்ணா நகர் 3வது தெருவில் தனியாக வசித்து வந்தார். அவரது குடும்பத்தினர் கன்னியாகுமரியில் வசித்து வருகின்றனர். ஐந்து நாட்களுக்கு முன் மது அருந்திய நிலையில் வீட்டிற்குள் உறங்கியுள்ளார். வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், நேற்று காலை துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால், சந்தேகமடை ந்த அக்கம்பக்கத்தினர், தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், வீட்டைத் திறந்து பார்த்தபோது ராஜரத்தினம் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தார்.
அவரது உடலை கைப்பற்றி, பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.