ஆண்கள் கிரிக்கெட் போட்டி அண்ணா பல்கலை வெற்றி
கோவை: அண்ணா பல்கலை 11வது மண்டல ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி, அண்ணா பல்கலை மண்டல மையம், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரியில் நேற்று துவங்கியது. 20 ஓவர் கொண்ட போட்டியில் 17 அணிகள் பங்கேற்றுள்ளன. அண்ணா பல்கலை மண்டல மையத்தில் நடந்த போட்டிகளை டீன் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.
முதல் போட்டியில் சி.கே.இ.சி., அணி 17.3 ஓவரில் 70 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய ஜி.சி.டி., அணி 6.1 ஓவரில் 71 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஏ.சி.இ.டி., அணி 12.1 ஓவரில் 37 ரன் எடுத்தது. அண்ணா பல்கலை மண்டல மைய அணி 5.5 ஓவரில் 40 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வரும் 29 வரை போட்டிகள் நடக்கின்றன.


