Sport
அண்ணா பல்கலை கிரிக்கெட், டேபிள் டென்னிஸ்
(படங்கள் திரு. சிவகுருநாதன்) துடியலூர், செப். 18- துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா
(படங்கள் திரு. சிவகுருநாதன்)
துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில், அண்ணா பல்கலை மண்டலம் - 11க்கான கிரிக்கெட் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் துவங்கின.
இம்மாதம் 20 வரை நடக்கும் போட்டியில், 17 கல்லூரிகள் பங்கேற்கின்றன. நேற்று போட்டியில் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி அணி, ரங்கநாதர் இன்ஜினியரிங் கல்லூரி அணியை வென்றது. தொடர்ந்து, காரமடை சக்தி இன்ஜினியரிங் கல்லூரி அணி, கேத்தி சி.எஸ்.ஐ., கல்லூரி அணியை வென்றது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் 6 அணியும், பெண்கள் பிரிவில் 6 அணியும் கலந்து கொண்டன. அரை இறுதி போட்டிக்கு குமரகுரு, கே.ஜி.ஐ.எஸ்.எல்., ராமகிருஷ்ணா, எஸ்.எம்.எஸ்., மற்றும் அரசு இன்ஜினியரிங் கல்லூரி அணிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தகுதி பெற்றன.
வட்டமலை பாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன் துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் செய்து இருந்தார்.