Sport
அரையிறுதியில் அண்ணா பல்கலை
கோவை, செப். 18– அண்ணா பல்கலை 11வது மண்டல ஆண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அண்ணா பல்கலை மண்டல மையத்தில்
அண்ணா பல்கலை 11வது மண்டல ஆண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அண்ணா பல்கலை மண்டல மையத்தில் நடக்கிறது; 17 அணிகள் பங்கேற்றுள்ளன. இரண்டாம் நாளான நேற்று பி.பி.ஜி., அணியினர் 12.3 ஓவரில் 74 ரன் எடுத்தனர். எஸ்.எஸ்.ஆர்.இ.சி. அணியினர் 13.1 ஓவரில் 78 ரன் எடுத்து வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து, ஜி.சி.டி. அணியினர் 18.5 ஓவரில் 66 ரன் எடுத்தனர். அண்ணா பல்கலை மண்டல மைய அணியினர் 13.1 ஓவரில் 70 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். இதையடுத்து அண்ணா பல்கலை அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. பல்கலை விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் சரவணமூர்த்தி உள்ளிட்டோர் போட்டிகளை நடத்துகின்றனர். வரும் 29ம் தேதி இறுதிப்போட்டி நடக்கிறது.