வீட்டுமனை பட்டா கோரி அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அந்தியூா் வட்டாட்சியா் சக்திவேல்.
அந்தியூரை அடுத்த பட்லூா் ஊராட்சி, பெருமாள் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் வசிக்கும் இடத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லையாம். இது குறித்து பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


