Politics
பட்டா கேட்டு தாலுகா அலுவலகம் முற்றுகை
அந்தியூர்:அந்தியூர் தாலுகா பட்லுார் ஊராட்சி பெருமாள் நகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்
தாலுகா பட்லுார் ஊராட்சி பெருமாள் நகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட
குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு வீட்டுமனை
பட்டா வழங்கப்படவில்லை.
நடவடிக்கை இல்லை. இந்நிலையில் பவானி தொகுதி வி.சி., கட்சி மாவட்ட
செயலாளர் வக்கீல் சுரேஷ் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள்,
அந்தியூர் தாலுகா அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் சக்திவேல், போலீசார்
பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக பெருமாள் நகர் பகுதியில் நிலம்
அளவீடு அளந்து, வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
என்று தாசில்தார் உறுதியளிக்கவே அனைவரும் கலைந்து சென்றனர்.