வசப்படும்! ‘ஜென்ஸி’க்களுக்கு பின்னலாடை நகரம் காத்திருக்கும் எண்ணற்ற வாய்ப்புகள்
திருப்பூர், செப். 6– திருப்பூர் என்றாலே பின்னலாடை ஏற்றுமதியும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் தான்
திருப்பூர் என்றாலே பின்னலாடை ஏற்றுமதியும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் தான் நினைவுக்கு வருவர். ஆனால், அந்த நிறுவனங்களின் பின்னணியில் நிர்வாகம், கணக்கு, மனிதவளம், தொழில்நுட்பம் என பல்லாயிரக்கணக்கான அலுவலர்களும் இயங்கி வருகின்றனர்.
படித்து முடித்த இளைஞர்கள் பலர் அரசு வேலை அல்லது சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் ‘ஐ.டி.,’ வேலை என கனவு காண்கின்றனர். ஆனால், ‘டாலர் சிட்டி’ திருப்பூரிலேயே நல்ல சம்பளத்துடன், நிரந்தரமான அலுவலர் மற்றும் அதிகாரி நிலை பணிகள் ஏராளமாக உள்ளன.
சிறிது காலம் சிரமப்பட்டு, தொழிலின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் என, மனிதவளத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



