சர்ச் திருவிழா தேர்பவனி
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகரில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் தேர்பவனி நடந்தது.
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் திருவிழா ஆக.31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலையில் நவநாள் திருப்பலி, மறையுரை நடந்தது.
9வது நாளில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பாதிரியார்கள் ஜான் பிரிட்டோ பாக்கியராஜ், பொருளாளர் அடைகல ராஜா, செயலக முதல்வர் தேவதாஸ் தலைமையில் பாதிரியார்கள் பீட்டர்ராய், அருள்தாஸ் முன்னிலையில் தேர்பவனி நடந்தது.

