Health
சர்ச் திருவிழா தேர்பவனி
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகரில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் தேர்பவனி நடந்தது.
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் திருவிழா ஆக.31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலையில் நவநாள் திருப்பலி, மறையுரை நடந்தது.
9வது நாளில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பாதிரியார்கள் ஜான் பிரிட்டோ பாக்கியராஜ், பொருளாளர் அடைகல ராஜா, செயலக முதல்வர் தேவதாஸ் தலைமையில் பாதிரியார்கள் பீட்டர்ராய், அருள்தாஸ் முன்னிலையில் தேர்பவனி நடந்தது.
தேர்பவனி சர்ச்சில் இருந்து துவங்கி மெயின் ரோடு வழியாக ஆர்.ஆர்., நகர் முக்கு ரோடு சென்று மீண்டும் சர்ச் வந்தடைந்தது. அதன் பின் திருவிழா கூட்டு திருப்பலி, மறையுரை நடந்தது.