Politics
மழையில் நனைந்து நெல் மணிகள் சேதம்
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சட்டசபையில் நேற்று பேசியதாவது: டெல்டா மாவட்டங்களில், அறுவடை முடிந்த
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சட்டசபையில் நேற்று பேசியதாவது:
டெல்டா மாவட்டங்களில், அறுவடை முடிந்த நிலையில், நெல் மணிகளை கொள்முதல் மையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வந்துள்ளனர். அங்கு நெல்லை, வாங்க கொள்முதல் மைய அதிகாரிகள் மறுப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் விவசாயிகள், கொள்முதல் மையங்கள் அருகில் திறந்தவெளியில் நெல் மணிகளை கொட்டி வைத்துள்ளனர்.
மழையில் நனைந்து, நெல் மணிகள் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நெல் கொள்முதலுக்கான விலையை மத்திய அரசு நிர்ணயிக்காததால், நெல்லை வாங்க மறுப்பதாக தகவல் வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், செப்., 1ல், கொள்முதல் விலை முடிவு செய்யப்படும்.
ஆனால், இந்த ஆண்டுக்கான விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு, மத்திய அரசை தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
