Politics
நெல் கொள்முதல் நிலையம் துவங்காததால் சாலை மறியல்
கோபி:கோபி அருகே தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனங்களில், கடந்த ஓரீரு நாட்களாக, நெல் அறுவடை பணி

அருகே தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனங்களில், கடந்த
ஓரீரு நாட்களாக, நெல் அறுவடை பணி துவங்கியுள்ளது.
புதுக்கரைப்புதுார், பாரியூர், கருங்கரடு பகுதிகளில், நேரடி நெல்
கொள்முதல் நிலையங்கள் துவங்கப்படவில்லை. இதனால் கோபி-அத்தாணி
சாலையில், புதுக்கரைப்புதுார் பஸ் ஸ்டாப்பில், 40க்கும் மேற்பட்ட
விவசாயிகள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். கோபி
தாசில்தார் குமரேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள்
பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகள் தரப்பில், 'நெல் கொள்முதல்
நிலையம் திறக்க, சம்பந்தப்பட்ட துறையினர் தாமதம் செய்வதாகவும்,
கொள்முதல் நிலையங்களில், கூடுதலாக பணியாட்கள் நியமிக்க வேண்டும்.
விரைந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும்' என வலியுறுத்தினர். உரிய
நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளிக்கவே விவசாயிகள் கலைந்து
சென்றனர்.