Politics
அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்..

மயிலாடுதுறை மாவட்டம் நல்லத்துக்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த நிலையில் மாலையில் பெய்த திடீர் மழையால் ஏராளமான மூட்டைகள் நனைந்துபோயின.
தார்ப்பாய் போட்டு மூடியிருந்தாலும், தேங்கிய மழை நீரில் மூட்டைகள் சேதமடைந்த வீடியோவை விவசாயிகள் வெளியிட்டுள்ளனர்.
கொள்முதல் நிலையத்தை உடனே திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.