Religion
கிருஷ்ண ஜெயந்தி விழா
சிவகங்கை, செப்.5-சிவகங்கை மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.சிவகங்கை அருகே பனங்காடி ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடினர். அண்ணாநகர் கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். விழாவில் கோலப்போட்டி, உறியடிக்கும் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கினர்.
இரவு கிருஷ்ணர் ரத ஊர்வலம் நடந்தது.
தேவகோட்டை கிருஷ்ணராஜபுரம் கிருஷ்ணர் கோயிலில் ஜெயந்தியை முன்னிட்டு காலையில் கிருஷ்ணருக்கு திருமஞ்சனமும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. மாலையில் கருட வாகனத்தில் அலங்காரத்தில் கிருஷ்ணர் வீதி உலா வந்தார். இதனைத் தொடர்ந்து உறியடி விழா நடந்தது.
கோதண்டராமர் ஸ்வாமி கோயிலில் ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடந்தன.
ரங்கநாத பெருமாள் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன.
நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
ராமகிருஷ்ண நடுநிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடந்தன.
யாதவ நர்சரி தொடக்கப்பள்ளியில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன.
கண்ணங்குடி ஒன்றியம் திருப்பாக்கோட்டையில் ராதாகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன.