Religion
கிருஷ்ண ஜெயந்தி விழா
தேனி: தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
உறவின்முறை தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார். துணை தலைவர் ஜீவகன், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமசந்திரன் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணன், ராதை வேடமிட்டு மாணவர்கள் நடனமாடினர்.
பள்ளி முதல்வர் சுபா, செயலாளர் அருண்குமார், இணைச் செயலாளர் விக்னேஷ் பிரபு பங்கேற்றனர்.