மாணவருக்கு பாலியல் துன்புறுத்தல்; 2 பேர் கைது
ஆத்துார்: பள்ளி மாணவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த கல்லுாரி மாணவர், பட்டதாரி வாலி-பரை, ஆத்துார் மகளிர் போலீசார் கைது செய்-தனர்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த, 14 வயது மாணவர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த கல்-லுாரி மாணவன் லியோ, 20; எம்.ஏ., -பி.எட்., படித்த பட்டதாரியான நவீன், 30, ஆகியோர், மாணவரை ஆற்று பகுதிக்கு அழைத்துச் சென்று, பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். மாண-வரை தொடர்ந்து மிரட்டி மூன்று மாதங்களாக இச்செயலில் ஈடுபட்டு வந்தனர். பாதிக்கப்பட்ட மாணவர் பெற்றோரிடம் தெரிவித்-துள்ளார். இதுகுறித்து ஆத்துார் மகளிர் போலீசில் அவர்கள் அளித்த புகாரின்படி விசாரணை நடந்-தது.
இதை தொடர்ந்து லியோ, நவீன் மீது, போக்சோ வழக்குப்பதிந்து போலீசார் தேடி வந்தனர். இருவ-ரையும் போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்-றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்