9ம் வகுப்பு மாணவருக்கு துன்புறுத்தல் கல்லுாரி மாணவர், பட்டதாரிக்கு வலை
கெங்கவல்லி:கெங்கவல்லி, தம்மம்பட்டியை சேர்ந்த, 14 வயது மாணவர், அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார்.
பகுதியை சேர்ந்த, கல்லுாரியில், 2ம் ஆண்டு படிக்கும் ராஜ் மகன் லியோ,
20, மற்றும் எம்.ஏ.,-பி.எட்., படித்த பட்டதாரியான, ஜெயராமன் மகன்
நவீன், 30, ஆகியோர், கடந்த ஜூனில், பள்ளி மாணவரை, ஆற்றுப்பகுதிக்கு
அழைத்துச்சென்று பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்துள்ளனர்.
அதேபோல் சிறுவனை மிரட்டி, 3 மாதங்களாக இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
மனம், உடல் அளவில் பாதிக்கப்பட்ட சிறுவன், அவரது பெற்றோரிடம்
தெரிவித்தான்.
நேற்று சிறுவனின் பெற்றோர் அளித்த புகார்படி ஆத்துார் மகளிர் போலீசார் விசாரித்து, லியோ, நவீன் மீது போக்சோ வழக்குப்
பதிந்து, இருவரையும் தேடுகின்றனர்.