Arts, culture, entertainment and media
மலையாள திரையுலகில் சாதனை; புதிய மைல்கல்லைத் தொட்டது ’பெத்தலேகம் குடும்ப யூனிட்’

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’பெத்தலேகம் குடும்ப யூனிட்’. இப்படம் வெளியாகி ஒரு மாதம் கூட நிறைவு பெறாத சூழலில் மலையாள திரையுலகில் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது.
அதன்படி, இப்படம் வெளியாகி 24 நாட்களில் ரூ.300 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. இது மலையாள திரையுலகில் மிகப்பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக, கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ’லோகா’ திரைப்படம் ரூ.300 கோடி வசூலைத் தாண்டியிருந்தது, இதுவே மிகப்பெரிய சாதனையாக இருந்துவந்தது. இந்நிலையில், 4 வாரங்களுக்குள் இப்படம் அந்த சாதனையை முறியடித்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது.
கிரிஷ் இயக்கத்தில் காதல் கலந்த நகைச்சுவை படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஃபஹத் ஃபாசில் அண்ட் ஃப்ரண்ட்ஸ், பாவனா ஸ்டுடியோ மற்றும் ஒர்க்கிங் கிளாஸ் ஹீரோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் உலக நாடுகளில் மொத்தமாக ரூ.309 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது. அதனால், இப்படம் மலையாள திரையுலக வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)