Arts, culture, entertainment and media
ரூ.25 கோடி பட்ஜெட்... ரூ.308 கோடி வசூல்! ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ மாபெரும் சாதனை
நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் வெளியான ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் ரூ.308 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மலையாள சினிமாவில் புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை

மலையாள சினிமாவின் வசூல் வேட்டை... ரூ.308 கோடி வசூலை குவித்த ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’!
மலையாள திரையுலகம் சமீப காலமாக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு வெளியான Lokah: Chapter 1 Chandra திரைப்படம் ரூ.300 கோடி வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.
இந்த நிலையில், தற்போது Bethlehem Kudumba Unit (BKU) திரைப்படம் மலையாள சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்துள்ளது.
நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில், கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள இப்படம் வெளியாகி 25 நாட்களில் ரூ.305 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இப்படம் ரூ.308 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற புதிய சாதனையை ‘Bethlehem Kudumba Unit’ படைத்துள்ளது.
கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம், புதுமையான கதை, சிறப்பான நடிப்பு மற்றும் வலுவான உணர்வுபூர்வமான காட்சிகளுக்காக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக நிவின் பாலி மற்றும் மமிதா பைஜுவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. திரையுலகினரும் இப்படத்தின் வெற்றியை வரவேற்று வருகின்றனர்.
ரூ.25 கோடி பட்ஜெட்டில் ரூ.308 கோடி வசூல்!
சுமார் ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் ‘Bethlehem Kudumba Unit’, தற்போது ரூ.308 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பது மலையாள சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைத் தாண்டி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு, மலையாள திரைப்படங்களின் வளர்ந்து வரும் சந்தை மற்றும் வணிக ரீதியான திறனை மீண்டும் நிரூபித்துள்ளதாக திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.
‘Bethlehem Kudumba Unit’ படத்தின் இந்த மாபெரும் வெற்றி, மலையாள சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் எல்லைகள் தொடர்ந்து விரிவடைந்து வருவதற்கான மற்றொரு முக்கிய உதாரணமாக பார்க்கப்படுகிறது.