Religion
கன்னியாகுமரி நவநீத கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு... திரளான பக்தர்கள் தரிசனம்..!

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிருஷ்ணர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிருஷ்ணர் ஆலயங்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாகர்கோவில் அருகே உள்ள நவநீத கிருஷ்ணர் ஆலயத்தில் இந்த விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமைந்துள்ள பழமையான நவநீத கிருஷ்ணர் ஆலயம், பக்தர்களால் “குட்டி குருவாயூர்” என்று அழைக்கப்படுகிறது. இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நவநீத கிருஷ்ணரை தரிசனம் செய்தனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிவித்து ஆலயத்திற்கு அழைத்து வந்தனர். கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவர் சிறுமிகள் ஆலய வளாகத்தில் ஓடி விளையாடி மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: Krishna Janmashtami: குழந்தை கிருஷ்ணன் தெரிஞ்சிருக்கும்... மீசை வைச்ச கிருஷ்ணன் தெரியுமா..?
இது பால் கிருஷ்ணரின் காலத்தை நினைவுபடுத்துவதாக பக்தர்கள் தெரிவித்தனர். ஆலயத்திற்கு வந்த இளம்பெண்கள், கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகளுடன் செல்பி எடுத்தும், அவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழாவைக் கொண்டாடினர்.
