Politics
அவசர பட்டுட்டியே குமாரு.. ரகுபதியிடம் மல்லு கட்டிய திமுக நிர்வாகிக்கு எச்சரிக்கை..! சீசீ...ச்சே..சே.. ஏ.கே.எஸ்.விஜயன்

புதுக்கோட்டையில் ஒருங்கிணைத்த திமுக செயல்வீரர்கள் மறுசீரமைப்பு கூட்டம் முன்னாள் எம்பியும், மாநில திமுக விவசாய அணி செயலாளருமான ஏ கே எஸ் விஜயன் தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி,மெய்யநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. அறந்தாங்கி தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ உதயம் சண்முகம், திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
“உன்னோட மகன் தான் தவெக வேட்பாளர் பர்வேஸ் கூட போய் விசிலுக்கு வாக்கு கேட்டான், தோல்விக்கு நீ தான் காரணம்” என்று ரகுபதி பதில் சொன்னதால், உதயம் சண்முகம் ஆவேசமாக முன்னேறி சென்று. ரகுபதி மற்றும் ஏ.கே.விஜயனிடம் இருந்த மைக்குகளை பறித்து பேச முயன்றார்.
இருவரும் மைக்கை கொடுக்க மறுத்த நிலையில் மைக் இல்லாமல் த.வெக காரனுக்கு தெம்பிருக்கு ஜெயிச்சிருக்கான, திமுகவுக்கு தெம்பிருந்தா ஜெயிச்சிகாட்டுங்க என்று சத்தமாக குரல் கொடுத்ததால், ஏ.கே.எஸ், விஜயன் ஆவேசமானார்.
அதுவரை பாரம்பரியம் மிக்க அரசியல் தலைவர் போல அமைதியாக சமரசம் செய்வது போல பேசிய ஏ.கே.எஸ். விஜயன், அசல் திமுக காரராக பேசத்தொடங்கினார். “ நீ மிரட்டுனா நாங்க பயந்துடுவோமா..” என்ற பாணியில் உதயம் சண்முகத்தை சரமாரியாக எச்சரிக்க தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் அவரது செயலை கடுமையாக விமர்சித்து பேசியதோடு, திமுக நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்தார்.
தலைவரிடம் இந்த புகாரை சொல்லுங்கள் என்று தன்னிடம் 30 ஆண்டுகளாக கவிதை பித்தன் சொல்லி வருவதாகவும், தான் ஒரு முறை கூட தலைவரிடம் அதனை எடுத்து சொல்லவில்லை என்று பெருமையாக கூறிய ஏ.கே.எஸ் விஜயன் கழகத்துக்குள் சண்டை வந்து விடக்கூடாது என்பதற்காக சொல்லவில்லை என்றார்.
பா.ஜ.கவோடு திமுக கூட்டணி வைத்த காலத்தில், 25 சதவீதம் முஸ்லீம்கள் வாழும் தொகுதியில் ஜெயித்த எனக்கே கடந்த தேர்தலில் சீட் தரவில்லை, அதற்காக நான் என்ன இப்படியா சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று தன்னுடைய ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்தார் ஏ.கே.எஸ்.விஜயன்.
திமுக ஓடுகிற ரெயில் இடம் கிடைக்கிறவன் ஏறிக்கொள், இல்லை என்றால் தண்டவாளத்தில் தான் கிடப்பாய் என்று அண்ணாவே சொல்லி இருப்பதாக தொண்டர்களுக்கு அறிவுறுத்திய ஏ.கே.எஸ். விஜயன் பொறுமையாக இருங்கள் பொறுப்புகள் தேடி வரும் என்று கூறி ஆவேசமானவர்களை அமைதிப்படுத்தினார்.



