Politics
தவெக கூட்டணிக் கட்சி கூட்டம்! கமகமக்கும் உணவு வகைகள்!

தவெக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு வழங்கவுள்ள உணவு வகைகள்.
பனைவூரில் நடைபெற்று வரும் தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களுக்கு வழங்குவதற்காக உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
தவெக ஆதரவுக் கட்சிகளின் 2-ஆவது ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (செப்.9) முதல்வரும் தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது.
தவெக ஆதரவுக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் பங்கேற்றுள்ளன.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தவெக அமைச்சர்கள் இடதுசாரி கட்சிகளின் மாநிலச் செயலா்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை.
இன்று நடைபெற்றும் வரும் தவெக ஆதரவுக் கட்சிகளின் கூட்டத்தில் கூட்டணியின் பெயர், எதிர்கால திட்டங்கள், அதற்கான செயல்பாடுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களுக்கு வழங்குவதற்காக வறுத்த முந்திரி, பாதாம், டீ, காபி, பழச்சாறு, பட்டர் தோசை, மைசூர் போண்டா, தயிர் வடை, வெஜ் ரோல், சாம்பார் வடை உள்ளிட்ட உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
Food items are being prepared for the participants of the TVK alliance parties' consultative meeting currently underway in Panaiyur.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.