Politics
மின்சாரம் பாய்ந்து பாட்டி பேரன் சாவு
நாகப்பட்டினம்: மின்சாரம் பாய்ந்து, பாட்டி இந்திராணி, 70, பேரன் வேல்முருகன், 13, ஆகிய இருவர் பலியாகினர்.
நாகை மாவட்டம், எட்டுக்குடியைச் சேர்ந்தவர் இந்திராணி. நேற்று மாலை, வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் குளித்து விட்டு வீடு திரும்பினார். வீட்டு வாசல் கேட்டில், மின் ஒயர் உரசி மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதையறியாமல், வாசல் கேட்டில் இந்திராணி கை வைத்தபோது மின்சாரம் தாக்கியது. அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது பேரன் வேல்முருகன், பாட்டியை பிடித்ததில், அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருக்குவளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.