Politics
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
விழுப்புரம்: திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கியதில் ஓட்டல் தொழிலாளி இறந்தார்.
திண்டிவனம் அடுத்த சலவாதியை சேர்ந்த முருகேசன் மகன் ஏழுமலை, 22; ஓட்டல் தொழிலாளி. இவர், கடந்த மாதம் 8ம் தேதி, மரக்காணம் சாலை இந்திரா நகர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்றார்.
அப்போது, அந்த வீட்டின் மாடி அருகில் சென்றபோது, அங்கிருந்த உயர் அழுத்த மின் கம்பி ஏழுமலை மீது பட்டு மின்சாரம் தாக்கியது.
இதில், பலத்த காயம் அடைந்த ஏழுமலையை, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பிறகு, மேல் சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, ஏழுமலை நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.