Religion
கிருஷ்ண ஜென்மாஷ்டமி இஸ்கானில் வழிபாடு

மதுரை: மதுரை திருப்பாலை இஸ்கான் கிருஷ்ண பலராமர் கோயிலில் ஜென்மாஷ்டமி விழா நடந்தது.
கிருஷ்ணர், பலராமருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. சிறப்பு மலர் அலங்காரத்தில் கிருஷ்ணர், பலராமரை பக்தர்கள் வழிபட்டனர். கோயில் வளாகம் முழுவதும் பக்தி பாடல்கள், பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் களைகட்டின.
முன்னதாக நடந்த சிறப்பு யாக நிகழ்வில் பக்தர்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை கூறினர். மதுரை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.