Politics
"வலிமையான இந்தியாவை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்" - பிரதமருக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக்குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்களும் அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்தைத் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவரது சமூக வலைதளப் பதிவில், "வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்." எனப் பதிவிட்டுள்ளார்.
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.
அதேபோல பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி நல்ல உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தனது சமூக வலைத்தளப்பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நமது மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தமது தீர்க்கமான தலைமைத்துவமும், தேசத்தின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் இந்தியாவின் முன்னேற்றத்தையும் செழிப்பையும் தொடர்ந்து வலுப்படுத்துகின்றன. நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நமது தேச சேவையில் தொடர்ச்சியான வலிமையுடனும் இருக்க வாழ்த்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
எப்படி இருக்கிறார் கொளத்தூர் MLA வி.எஸ். பாபு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை...!
சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு அனுமதி.
அவரின் உடல்நலன் குறித்து, மருத்துவ நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.
