Politics
பிரதமர் மோடி பிறந்தநாள் விழா
பெருநாழி: கமுதி தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 76 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கமுதி தெற்கு ஒன்றியத் தலைவர் வேலவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கணபதி முன்னிலை வகித்தார்.
மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் லயன் கே. சரவணன், மாவட்ட மகளிர் அணி தலைவர் வெள்ளையம்மாள், வடக்கு ஒன்றிய தலைவர் எஸ்.கே.தேவர் மற்றும் மத்திய ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.