நல்லாசிரியர் விருது தொகை ரூ.10,000 பள்ளிக்கு வழங்கல்
நாமக்கல்; தமிழக பள்ளிக் கல்வித்துறையில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்-படி, 2025-26ம் ஆண்டுக்கான விருதை, நாமக்கல் மாவட்டத்தில், எட்டு ஆசிரியர்கள் பெற்றனர்.
அதை தொடர்ந்து, நாமக்கல் அரசு மகளிர் மேல்-நிலைப்பள்ளி வளாகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்-சியில், நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை-யாசிரியர் சுமதிக்கு, ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவியர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து தலைமையாசிரியர் சுமதி, நல்லாசிரியர் விரு-துடன் பெற்ற, 10,000 ரூபாயை பள்ளியின் வளர்ச்-சிக்காக கொடுப்பதாக, அரசிடம் பெற்ற தொகையை பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்ப-டைத்தார்.