விருதுநகரில் 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இந்தாண்டிற்கான மாநில நல் லாசிரியர் விருது 11 ஆசிரியர் களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இவ்விருதுக்கு 70க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று மாவட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்டோர் விபரம் முதன் முறையாக தபால் மூலம் சி.இ.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்டது.
விருதுக்கு தேர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் தங்கள் மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லை என நற்சான்று பெற்று செப்.5ல் சென்னையில் நடக்கும் ஆசிரியர் தின விழாவில் பங்கேற்க அறி வுறுத்தப்பட்டுள்ளது.