மாநில நல்லாசிரியர் விருது: நீலகிரியில் 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது..!

நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்காக ஒன்பது ஆசிரியர்கள் பெற்றுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்காக ஒன்பது ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வு நீலகிரி மலை மாவட்ட மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அரவேணு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை வி.மல்லிகா குமார், கேர்கொம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கே.ஆனந்தன், சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை சி. மாலதி ஆகியோர் ஆவர்.
மேலும், தொட்டண்ணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை எம்.ரேவதி, ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை வி.சசிகலா, தும்மனட்டி அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியை பி.பார்வதி, தேவர்சோலை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கே.அன்பழகன், கோத்தகிரி அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் ஆர்.சிவராஜ், கோத்தகிரி ஹில்போர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆர்.சோபனா ஆகியோரும் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
