பைக் மீது லாரி மோதி டெய்லர் பரிதாப பலி
கூடுவாஞ்சேரி, செப். 10-– கூடுவாஞ்சேரி, நெல்லிக்குப்பம் சாலையில், இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், 47
கூடுவாஞ்சேரி, நெல்லிக்குப்பம் சாலையில், இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், 47 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், 47. இவர், கூடுவாஞ்சேரியில், டெய்லராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் காலை, வழக்கம்போல் வேலைக்கு வந்தவர், மாலை, ‘யமாஹா’ ஸ்கூட்டரில், நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள மற்றொரு டெய்லர் கடைக்கு சென்றார்.
எஸ்.ஆர்.எம்., பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி, குணசேகரன் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தோர் மீட்டு, எஸ்.ஆர்.ஆம்., மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, புதுச்சேரியை சேர்ந்த லாரி ஓட்டுநர் முத்துக்குமார், 38, என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
