Health
1 நாற்று பண்ணைகளில் டெங்கு விழிப்புணர்வு
கோவை: டெங்குவை கட்டுப்படுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஐந்து மண்டலங்களில் குரோட்டன்ஸ் உள்ளிட்ட அலங்கார செடிகள் விற்பனையகங்கள், 57 நாற்று பண்ணைகள் கண்டறியப்பட்டு, உரிமையாளர்கள், அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், ‘டிரேக்களில் நீர் தேங்காதவாறு தினசரி சுத்தம் செய்வது, மழைநீர் தேங்கும் குழிகளை உடனே சரி செய்வது, தொட்டிகளை மூடி வைப்பது, பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக், சிமென்ட் தொட்டிகளை கவிழ்த்து வைப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
கொசுப்புழு கண்டறியப்பட்டால் அகற்றி, சுகாதாரப் பணியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளோம’ என்றனர்.