சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன்
ராசிபுரம்:ராசிபுரம் நகராட்சியில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மத்திய அரசின் சுவநிதி
நகராட்சியில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்த, மத்திய அரசின் சுவநிதி திட்ட கடன் முகாம் இம்மாதம்
முழுவதும் நடக்கிறது.
இதுகுறித்து, ராசிபுரம் நகராட்சி கமிஷனர் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கை:
நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு,
பிரதம மந்திரி மத்திய அரசு சுவநிதி திட்டம் மூலம், கடன் வழங்கும்
முகாம் செப்டம்பர் மாதம் முழுவதும் நடக்கிறது. இதில் பெட்டிக்கடை,
டிபன் கடை, காய்கறி கடை, பூக்கடை, பழக்கடை வைத்துள்ள வியாபாரிகள்
தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளும் வகையில்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக குறைந்த வட்டியில் ரூபாய்,
15,000 முதல், 50,000 வரை கடன் வழங்கப்படுகிறது.
விரும்பும் சாலையோர வியாபாரிகள் தங்களுடைய ஆதார் கார்டு, ஆதாருடன்
இணைக்கப்பட்ட மொபைல் எண், வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள
அட்டை, கூகுள் பே அல்லது போன் பே எனப்படும் யு.பி.ஐ., எண் ஆகிய
ஆவணங்களுடன் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வர
வேண்டும்.
அங்குள்ள நகரமைப்பு பிரிவில் விண்ணப்பத்தை
இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அந்த விண்ணப்ப நகலை பெற்று
சம்பந்தப்பட்ட வங்கிகளில் ஒப்படைத்து குறைந்த வட்டியில் கடன்
பெற்று பயனடையலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.