கி.கிரி சாலையோர வியாபாரிகள் வங்கி கடன் பெற சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரியில், சாலையோர வியாபாரிக-ளுக்கு, கடன் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று (செப். 3-) துவங்கி வரும், 30-ம் தேதி வரை
நடக்கிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷ்னர் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரம் மற்றும் மிதிவண்டியில் வியா-பாரம் செய்வோர், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் கூடைகளில் சுமந்து வீதி வீதியாக பொருட்களை விற்பனை செய்யும் சிறு வியாபா-ரிகளுக்கு, மத்திய அரசின் பி.எம்., ஸ்வநிதி திட்-டத்தில், வங்கிக்கடன் உதவி பெற சிறப்பு முகாம் நடக்கிறது. இத்திட்டத்தில் தகுதியுள்ள வியாபா-ரிகளுக்கு, முதல் தவணையாக, 15,000 ரூபாய், 2-ம் தவணையாக, 25,000 ரூபாய், 3-ம் தவணையாக, 50,000 ரூபாய் வரை, வங்கிகள் மூலம் பிணை-யில்லா தொழிற்கடன் வழங்க, நகராட்சி நிர்வா-கத்தால் விண்ணப்பிக்கலாம். இச்சிறப்பு கடன் மேளா நேற்று (செப்.3-) துவங்கி வரும், 30-ம் தேதி வரை நடக்கிறது.
எனவே, சாலையோர வியாபாரிகள் அனை-வரும் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றுடன் நேரில் விண்-ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் இத்திட்-டத்தில் பதிவு செய்து கடன் பெறுபவர்களுக்கு மட்-டுமே, நகராட்சியின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, வணிக பயன்பாட்டிற்கான கடன் அட்டை மற்றும் மத்திய அரசின் இதர நலத்திட்ட உத-விகள் கிடைக்க வழிவகை செய்யப்படும். எனவே, அனைத்து சாலையோர சிறு வியாபாரிகளும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்-வாறு,
அதில் தெரிவித்துள்ளார்.