Politics
கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் கே.ஜி.கண்டிகை விவசாயிகள் எதிர்பார்ப்பு
திருத்தணி, செப். 5– கே.ஜி.கண்டிகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து,

கே.ஜி.கண்டிகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகையில் விவசாயிகள் நலன் கருதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 2025 – -26ம் ஆண்டின் கீழ், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் நேரடி கொள்முதல் நிலையம் கட்டப்பட்டது. கட்டி முடித்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும், விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. தற்போது, சொர்ணவாரி பருவ நெல் அறுவை துவங்கியுள்ளது.
கலெக்டர் கவிதா, கடந்த வாரம், 50 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், கே.ஜி.கண்டிகை நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காததால், இப்பகுதி விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே, மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, கே.ஜி.கண்டிகை நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தை திறந்து, விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.