Politics
முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சுதர்சன நாச்சியப்பன் (79) இன்று காலமானார்.
கடந்த 1999-2004ஆம் ஆண்டு காலத்தில் சிவகங்கை எம்.பி ஆக பதவி வகித்த சுதர்சன நாச்சியப்பன், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் கடந்த 2013இல் வணிகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராக பதவி வகித்துள்ளார். அது மட்டுமல்லாமல் 2004ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை எம்.பியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் போன்ற முக்கிய பொறுப்புகளில் வகித்த இவர், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் செயல்பட்டார். இந்த நிலையில், சிவகங்கையில் உள்ள இல்லத்தில் மாரடைப்பு காரணமாக அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)