Politics
முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் காலமானார்..
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான இ.எம். சுதர்சன நாச்சியப்பன் (80) உடல்நலக்குறைவால் இன்று (செப். 17) காலமானார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதர்சன நாச்சியப்பன். வழக்கறிஞரான இவர் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞராக பணியாற்றினார்.
இவர் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2004 ம் ஆண்டு வரை எம்பி யாக இருந்தார். 2004 – 2016 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக 2013ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர், நாடாளுமன்ற கட்சி கொறடா உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார். சுதர்சன நாச்சியப்பன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரின் சித்தப்பா ஆவார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரது உடல் இன்று மாலை சொந்த ஊரான ஏரியூர் எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் இல்லத்திலிருந்து நாளை (செப். 18) மாலை 3.30 மணியளவில் நல்லடக்கம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Former Union Minister Sudarsana Nachiappan has passed away
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.