Politics
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுற்றுச்சுவர் அமைப்பது ஆபத்து
பா.ம.க., சவுமியா எச்சரிக்கைசென்னை, செப். 7– பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி, சுவர் அமைப்பது, அப்பகுதி
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி, சுவர் அமைப்பது, அப்பகுதி மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என, பா.ம.க., எம்.எல்.ஏ., சவுமியா எச்சரித்துள்ளார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், ‘நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள்’ திட்டத்தின் கீழ், 3 கி.மீ., நீளத்திற்கு, சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதைகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதை, பா.ம.க., எம்.எல்.ஏ., சவுமியா, நேற்று பார்வையிட்டார்.
பின், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிக்கப்பட்டால், அதன் அங்கமாக உள்ள பறவைகள், ஊர்வன வகைகள், மீன்கள், மரங்கள், மூலிகைகள், புற்கள், நீர்வாழ் தாவரங்கள், பூச்சிகள் அழிவை சந்திக்கும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம், தண்ணீரை தேக்கி வைக்கும், வெள்ள நீர் வடிகாலாக பயன்படுகிறது.
எனவே, இதை பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆனால், தமிழக அரசு, சதுப்பு நிலத்தை சுற்றி, சுவர் அமைத்து, குடியிருப்பு பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் செயலில் ஈடுபடுகிறது.
இந்த சதுப்பு நிலத்தை பாதுகாக்க, சுற்றுச்சுவர் தேவையில்லை; வேலி மட்டும் போதும். சுற்றுச்சுவர் அமைப்பது மக்களுக்கு ஆபத்தை உருவாக்கும். தேவையற்ற திட்டத்தை, 21 கோடி ரூபாய் கடன் பெற்று செயல்படுத்துவது அவசியமா. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை, ராம்சார் நிலமாக வரையறை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில், 21 கோடி ரூபாய் செவில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் வீணாக இடித்து தள்ளப்படும். எனவே, தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.