Politics
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கும் திட்டத்தை தொடரும் த.வெ.க., : அன்புமணி
சென்னை, செப். 5– ‘தி.மு.க., அரசு கொண்டு வந்த, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கும், நெய்தல் மீட்டு இயக்கம்
‘தி.மு.க., அரசு கொண்டு வந்த, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கும், நெய்தல் மீட்டு இயக்கம் திட்டத்தை, த.வெ.க., அரசு தொடர்வது கண்டிக்கத்தக்கது’ என, பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கடலோர வளங்களை மீட்டெடுப்பதாக கூறி, கடந்த 2024ல், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற திட்டத்தை, தி.மு.க., அரசு தொடங்கியது.
அதன்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சதுப்பு நிலத்தின் எல்கலைகளை வரையறுக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, சதுப்பு நிலத்தை அழிக்கும் முயற்சியை, தி.மு.க., அரசு தொடங்கியது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய தமிழக அரசு, அதன் பங்குக்கு ஆக்கிரமிப்பு செய்து, 3 கி.மீ நீளத்திற்கு, 6 அடி உயரத்தில், தடுப்புச் சுவரையும், அதற்கு உட்புறத்தில் 2 கி.மீ நீளத்திற்கு நடைபாதையும் அமைத்து வருகிறது.
தடுப்பு சுவர், நடைபாதை ஆகிய இரண்டுமே, நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இப்படி ஒரு திட்டத்தை ஊழல் செய்யும் நோக்கத்துடன் தான், தி.மு.க., அரசு அறிவித்தது. ஆனால், த.வெ.க., அரசு, இந்தத் திட்டத்தை தொடருவது ஏன். இது, ஏற்க முடியாதது, கண்டிக்கத்தக்கது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறை செய்து அறிவிக்க வேண்டும். இதை செய்ய தவறினால், சென்னையில் பா.ம.க., போராட்டம் நடத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
