நிதி நிறுவனம் நடத்தி 2,000 பேரிடம் ரூ.800 கோடி மோசடி..

சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் Profit Power Traders என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் 800 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் அந்நிறுவனத்தின் இயக்குநர் ராகினியின் வீடு மற்றும் இரண்டு அலுவலகங்களுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.
இவ்வழக்கில் சண்முக பாண்டியன் என்பரைக் கைது செய்து போலீசார், தலைமறைவாக உள்ள ராகினி, அவரது கணவர் விஜயராகவன் உள்ளிட்டோரை தேடிவருகின்றனர்.