ரூ.250 கோடி மோசடி விவகாரம் நிதி நிறுவன ஆபீஸ், வீட்டுக்கு சீல்
சேலம்:சேலம், அழகாபுரம் ரெட்டியூரை சேர்ந்தவர் ராகிணி. இவரது கணவர் விஜயராகவன். இவரது நண்பர், மதுரையை சேர்ந்த
அழகாபுரம் ரெட்டியூரை சேர்ந்தவர் ராகிணி. இவரது கணவர்
விஜயராகவன். இவரது நண்பர், மதுரையை சேர்ந்த செண்பக பாண்டியன், 45.
இவர்கள், 2024ல், குரங்குச்சாவடியில், 'ப்ராபிட் எவர் டிரேடர்ஸ்'
பெயரில் நிதி நிறுவனத்தை தொடங்கினர். ராகிணி, செண்பக பாண்டியன்
இயக்குனர்களாகவும், விஜயராகவன் மேலாளராகவும் பணியாற்றினர்.
பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக கிடைக்கும் என கவர்ச்சி
அறிவிப்புகளை வெளியிட்டனர். அதன்மூலம் பலரிடம் முதலீடு பெற்று, 250
கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து பொருளாதார
குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, செண்பக பாண்டியனை கைது
செய்தனர்.
மேலும் விசாரணையில் குரங்குச்சாவடியில் வாடகை
கட்டடத்தின் முதல் மற்றும் 2ம் தளத்தில், அந்த நிறுவன அலுவலகங்கள்
செயல்பட்டது தெரிந்தது.
உரிமையாளரை வரவழைத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில்
அந்த அலுவலகங்களுக்கு, 'சீல்' வைத்தனர். தொடர்ந்து அழகா
புரத்தில் வசிக்கும் ராகிணியின் வீட்டுக்கும், 'சீல்' வைத்தனர். மேலும் ராகிணி, விஜய
கின்றனர்.