Religion
கும்பாபிஷேக விடுமுறை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வு முன் மதுரை ரமேஷ் ஆஜராகி முறையிட்டதாவது:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்., 17 ல் நடக்கிறது. இதையொட்டி மதுரை மாவட்ட அரசுத்துறை அலுவலகங்களுக்கு தமிழக அரசு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. அதுபோல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றார். நீதிபதிகள்: இது தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்துள்ளீர்களா.
ரமேஷ்: இல்லை.
'நீதிபதிகள், நீங்கள் கோரும் நிவாரணம் நிர்வாக ரீதியான முடிவு சம்பந்தப்பட்டது' என தெரிவித்தனர்.
இவ்வாறு வாதம் நடந்தது.