Arts, culture, entertainment and media
“இந்த படத்தில் ஏமாற்றிவிட்டார்... அடுத்த படத்தில் வீடு கொடுப்பார்...” - சாம்.சி.எஸ் எதிர்பார்ப்பு!

ஜிவி பிரகாஷ் - கயாடு லோஹர் நடிப்பில் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இம்மார்ட்டல்’. ஏகே ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இப்படத்தில் டிஎம் கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படம் ஃபேண்டஸி கலந்த ஒரு த்ரில்லர் படமாக கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் சாம் சி.எஸ்.கலந்து கொண்டு பேசுகையில், “இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்பினேன். அதே போல் நடந்துவிட்டது. ஒரு படத்தில் கதை, திரைக்கதையைத் தாண்டி படத்தில் வேலை பார்க்கும் அனைவரும் இந்த படம் ஹிட்டாக வேண்டுமென நினைத்து வேலை பார்த்தால் அந்த படம் நிச்சயம் ஹிட்டாகும். அது போல நிறைய படங்களை நான் பார்த்திருக்கிறேன்.
இம்மார்ட்டல் மாதிரியான படத்திற்கு போஸ்ட் புரொடக்ஷனில் நிறைய டைம் தேவைப்படும். ஆனால் நிறைய படங்களில் பூசனிக்காய் உடைத்தவுடனேயே ரிலீஸ் தேதியை அறிவித்துவிடுகிறார்கள். அதற்கு பின்னால் வியாபார நோக்கம் இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். இருந்தாலும் சில படங்களுக்கு என்ன தேவையோ அதற்கான நேரத்தை நாம் கொடுக்க வேண்டும். அதனால் இந்த படத்திற்கு தயாரிப்பாளர் கொடுத்த நேரம் ரொம்ப பெரியது. அதை படக்குழுவினர் சரியாக பயன்படுத்திக்கொண்டனர்.
நம்ம ஊரில் வித்தியாசமான படங்களை எடுக்க இந்த மாதிரியான படம் வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் அப்போது தான் இனி வரும் இயக்குநர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும். இந்த படம் முடிந்தவுடன் எல்லாருக்கும் வீடு கொடுப்பதாகத் தயாரிப்பாளர் சொன்னார். ஆனால் அதற்கு பதில் கடிகாரத்தைக் கொடுக்கிறார். இதே டீமோடு இன்னொரு படம் பண்ணவுள்ளதாக அவர் சொல்லியிருக்கிறார், அதில் வீடு கொடுப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)