Lifestyle and human interest
மெக்கா நகரம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி அரேபியா முறியடிப்பு
-நமது நிருபர்-சவுதியின் மெக்கா நகரம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள், ட்ரோன் தாக்குதல்

சவுதியின் மெக்கா நகரம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள், ட்ரோன் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்கா நகரின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்றனர். எனினும், மெக்கா வான் எல்லைக்குள் நுழைவதற்குள் அந்த ட்ரோனை சவுதி அரேபிய வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தி தாக்குதல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தனர்.
இது குறித்து சவுதி வான் பாதுகாப்புப் படை கூறியதாவது: மெக்காவை நோக்கி ஹவுதி படையினரால் ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன. வழிபாட்டாளர்கள், மக்களை அச்சுறுத்த மெக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
புனித நகரங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்கமாட்டோம். இவ்வாறு சவுதி படை தெரிவித்துள்ளது. 2017-க்குப் பிறகு மெக்காவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் முயற்சி இதுவாகும்.
அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த பிப்ரவரி போர் துவங்கியதில் இருந்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தற்போது புனித நகரை குறிவைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.