Arts, culture, entertainment and media
ரங்கப்பனுாரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கி நிகழ்ச்சி துவக்கி வைத்தார்.ஆர்.டி.ஒ முருகன்,சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சுமதி,வாணாபுரம் வட்டாட்சியர் நளினி,சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கங்கா லட்சுமி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, அழகுராஜா,ஊராட்சி மன்ற தலைவர்கள் அர்ச்சனா காமராஜன்,சித்ரா தாஸ் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பத்மஜா வழங்கினார்.பின்பு பொதுமக்களிடமிருந்து 210 மனுக்கள் பெறப்பட்டனர்.நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர்கள்,வருவாய் ஆய்வாளர்,விஏஓ கள்,சர்வேயர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.