Arts, culture, entertainment and media
அத்திவாக்கத்தில் மக்கள் தொடர்பு முகாம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட அத்திவாக்கம் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று நடைபெறுவதாக, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வருவாய் துறை சார்பில், பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு, அவற்றுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், கலெக்டர் தலைமையில் மாதந்தோறும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், பட்டா மாறுதல், பல்வேறு சான்றிதழ்கள், அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, தகுதியின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான மக்கள் தொடர்பு திட்ட முகாம், அத்திவாக்கம் கிராமத்தில் இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
இதில், அத்திவாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை, கலெக்டரிடம் நேரடியாக வழங்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.