Religion
காங்கேயத்தில் விசர்ஜன ஊர்வலம்
காங்கேயம்:சதுர்த்தி விழாவை முன்னிட்டு, காங்கேயம் சுற்று பகுதி முழுவதும் வி.ஹெச்.பி., அமைப்பின் சார்பில், 14
விழாவை முன்னிட்டு, காங்கேயம் சுற்று பகுதி முழுவதும் வி.ஹெச்.பி.,
அமைப்பின் சார்பில், 14 விநாயகர் சிலைகள் நேற்று முன்தினம் பிரதிஷ்டை
செய்யப்பட்டது.
பக்தர்கள் பொங்கலிட்டு சிறப்பு பூஜை செய்து
வழிபட்டனர். சதுர்த்தி தினமான நேற்று சிலைகளுக்கு ஹோமம், அபிஷேகம்,
ஆராதனை நடந்தது. மாலை, 4:30 மணிக்கு களிமேட்டுக்கு அனைத்து சிலைகளும்
கொண்டு வரப்பட்டன. அங்கு நடந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட செயல்
தலைவர் சங்கரகோபால் தலைமை வகித்தார். 5:00 மணியளவில் விசர்ஜன
ஊர்வலம் தொடங்கியது. நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக
சென்று பழையகோட்டை ரோடு ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் நிறைவு
பெற்றது. இதில், 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர்
வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றில்
கரைக்கப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையில், டி.எஸ்.பி.,
சிவக்குமார், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட, 70 போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டனர்.