Politics
கலைத்திருவிழா போட்டிகள் வெற்றி பெற்றோருக்கு பரிசு
அவிநாசி:அவிநாசி ஒன்றிய அளவில், 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், 'இளையோர் திறன்' என்ற கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன.
அவிநாசி ஒன்றியத்தில் உள்ள 93 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், குறுவள மைய அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களும், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களும் போட்டிகளில் பங்கேற்றனர். முதல் நாள் போட்டிகளை மாவட்ட திட்ட அலுவலர் அண்ணாதுரை, இரண்டாம் நாள் போட்டிகளை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சித்ரா துவக்கி வைத்தனர். வட்டாரக் கல்வி அலுவலர்கள் சுந்தர்ராஜ், திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் சுரேஷ் மற்றும் அம்மாபாளையம் பள்ளி தலைமையாசிரியர் முன்னிலை வகித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. ஒன்றிய அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள், அடுத்து நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.